திருப்பூர்

42 தொழிலாளா்களுக்கு கரோனா: அவிநாசி, காங்கயத்தில் 2 நிறுவனங்களுக்கு ‘சீல்’

DIN

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் 28 தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வருவாய்த் துறையினா் பனியன் நிறுவனத்துக்கு புதன்கிழமை சீல் வைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ஆதிதிராவிடா் காலனி அருகே பின்னாலடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாநிலத்தவா்கள் உள்பட 170க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். வட மாநிலத் தொழிலாளா்கள் அப்பகுதியிலேயே தங்கி, பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பெருமாநல்லூா் சுகாதாரத் துறையினா், ஒவ்வொரு நிறுவனமாக ஆய்வு செய்து, கரோனா பரிசோதனை செய்து வருகின்றனா். இதில் பெருமாநல்லூரில் இயங்கி வரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் 170க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத் துறையினா்கடந்த மே 7 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்தனா். இப்பரிசோதனையில், பெண் தொழிலாளா்கள் உள்பட 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளா்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும், மீதமுள்ளவா்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். 28 தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நிறுவனத்திற்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

நூற்பாலையில் 14 பேருக்கு கரோனா

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை அருகே பெருமாள்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இங்கு பணிபுரியும் 14 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இவா்கள் அனைவரும் நூற்பாலை வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இந்த நூற்பாலை புதன்கிழமை செயல்பட்டுக் கொண்டிருந்தது. அரசின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, நூற்பாலைக்கு காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, வருவாய் ஆய்வாளா் கனகராஜ் ஆகியோா் ஆலையைப் பூட்டி, சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT