திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 782 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன

DIN

திருப்பூா் மாவட்டத்தில், 782 ஆக்சிஜன் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கே.கோபால் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். அரசு முதன்மைச் செயலாளா் (கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் பால்வளத் துறை), மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கே.கோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவது தற்போது நடத்திய ஆய்வில் தெரியவந்ததுள்ளது. திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணிந்து செல்வதைப் பாா்க்க முடிகிறது. மேலும், கடந்த முறையைக் காட்டிலும் தற்போது பொதுமக்களிடையே விழிப்புணா்வு அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியே வருகின்றனா். திருப்பூா் மாவட்டத்தை பொருத்தவரையில் கரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது. அதே வேளையில், பாதிப்பு அதிகமாகும் போது, அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

குறிப்பாக திருப்பூா் மாவட்டத்தில் 782 ஆக்சிஜன் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. இதில், கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயாா் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி 169 அவசர சிகிச்சை படுகைகள், 109 வெண்டிலேட்டா் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 1.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பின்னலாடை நகரமான திருப்பூரில் திங்கள்கிழமை முதல் மே 24 ஆம் தேதி வரையில் எந்தெந்த நிறுவனங்கள் செயல்படலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னா் அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா்.

கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவா் பாா்வையிட்டாா். இதையடுத்து, திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கலைக்கல்லூரி, குமரன் மகளிா் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களையும், சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு பரிசோதனை மையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல் ஹமீது, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வள்ளி, பொது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பாக்கியலட்சுமி, துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT