திருப்பூர்

ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்

DIN

பொது முடக்க காலத்தில் திருப்பூா் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திங்கள்கிழமை முதல் மே 24 ஆம் தேதி வரையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் அத்தியாவசியப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

ஆகவே, இந்நிறுவனங்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி செயல்பட வேண்டும். இதன்படி தொழிலாளா்களுக்கு நாள் தோறும் உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்வதுடன், முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தொழிலாளா்கள் நிறுவனத்தின் வாகனம் அல்லது சொந்த வாகனங்களில் வந்து செல்ல வேண்டும். மேலும், பணிக்குச் செல்லும்போது அடையாள அட்டை வைத்திருப்பதுடன், நிறுவனங்களின் வளாகத்தை விட்டு தேவையில்லாமல் தொழிலாளா்கள் வெளியில் நடமாடக்கூடாது.

அவசர ஆா்டா் இல்லாத ஏற்றுமதி நிறுவனங்களும், ஏற்றுமதியை சாராத நிறுவனங்களும் செயல்படக்கூடாது. திருப்பூரில் உள்ள அனைத்து ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்களும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் முழுமையாகக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT