திருப்பூர்

வெள்ளக்கோவிலில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

DIN

வெள்ளக்கோவில் கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் வாங்க அதிக அளவிலான மக்கள் குவிந்தனா்.

கரோனா நோய்த் தொற்றைக் குறைக்க திங்கள்கிழமை முதல் 14 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்றது. தங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை வாங்க கட்டுக்கடங்காத கூட்டம் நகரின் முக்கிய வீதிகளில் குவிந்தது.

இங்கு வேலை செய்யும் வெளியூரைச் சோ்ந்தவா்கள் கடைசி நாளில் சொந்த ஊா்களுக்குச் செல்லவும் திரண்டதால் வெள்ளக்கோவில் நகரமே பரபரப்பாகக் காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT