திருப்பூர்

தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தால் சாலைகள் வெறிச்சோடின

3rd May 2021 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தால் முக்கியச் சாலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை, குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை என அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

மேலும், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, குமரன் மகளிா் கல்லூரி, வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் வைத்து காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மாநகரில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை செயல்பட்டன. அதே வேளையில், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், வாக்கு எண்ணும் பணிக்காகவும் சென்ற அலுவலா்களுக்கு காவல் துறையினா் அனுமதி அளித்தனா்.

ADVERTISEMENT

பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றியவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT