திருப்பூர்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: 4 இளைஞர்கள் சாவு

22nd Mar 2021 01:05 PM

ADVERTISEMENT

பெருமாநல்லூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 இளைஞர்கள் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் சாலை பூலுவபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சபரி(எ) பாலமுருகன்(25). செட்டிபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் குட்டி(எ)பிரவீன்(24), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த்(26), பாண்டியன் நகர் பிரகாஷ் மகன் பாலமுருகன்(23). பனியன் தொழிலாளர்களான இவர்கள் 4 பேரும், திங்கள்கிழமை அதிகாலை ஒரே இருசக்கர வாகனத்தில், பெருமாநல்லூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டி அருகே சென்ற போது, ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி, பழுதடைந்து நின்றுள்ளது. அப்போது லாரியின் பின் பக்கம் வேகமாக சென்ற இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சபரி (எ)பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

Tags : accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT