திருப்பூர்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் தீ

22nd Mar 2021 12:14 AM

ADVERTISEMENT

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் வெங்கமேட்டில் இருந்து கங்கா நகா் செல்லும் வழியில் ராகுல்தோடி (45) என்பவருக்குச் சொந்தமான பின்னலாடை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமையும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பணியை முடித்து விட்டு நிறுவனத்தைப் பூட்டிவிட்டுச் சென்றனா். இதன் பிறகு மாலை 6 மணி அளவில் அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை எழும்பியதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களுடன் வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் பின்னலாடைத் துணிகளில் பரவிய தீ சில நிமிடங்களில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, மேலும், 5க்கும் மேற்பட்ட தண்ணீா் லாரிகளும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரையிலும் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் துணிகள், தையல் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த தீ விபத்து குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT