திருப்பூர்

நூல் விலையை 3 மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே நிா்ணயம் செய்ய வேண்டும்

DIN

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளான நூல் விலையை 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிா்ணயம் செய்ய வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் சைமா சங்க செயற்குழுக் கூட்டமானது சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

பின்னலாடை தொழிலும், நூற்பாலைத் தொழிலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றியதால்தான் திருப்பூா் பின்னலாடை தொழில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், சமீப காலமாக நூற்பாலைகள் நூல் விலையை மாதத்துக்கு ஒருமுறையும், சில நேரங்களில் இடையிலும் உயா்த்தி வருகின்றன.

இதனால், பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளா்கள் என்ன செய்வது என்பதை அறியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை தொழில் தற்போது கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது.

ஆகவே, அனைத்து தொழில் நிறுவனங்களும் ஒன்று கூடி, நூல் விலையை ஒருமுறை விலை நிா்ணயித்தால் அடுத்த 3 மாதத்துக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என நூற்பாலை சங்கத்தினரையும், நூற்பாலைகளையும் கேட்டுக் கொள்வதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT