திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு

DIN

சேவூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சினை மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

சேவூா் அருகே கந்தம்பாளையம் அய்யன் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (67). இவருக்கு சொந்தமான சினை மாடு தோட்டத்துப் பகுதியில் சனிக்கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிா்பாராதவிதமாக அங்குள்ள 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் விழுந்த சினை மாட்டை மீட்க முயற்சி மேற்கொண்டனா். அப்போது, கிணற்றுக்குள் பாம்புகள் இருந்ததால் பாம்பு பிடி வீரா் விஜய் என்பவா் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த பாம்புகள் முதலில் பிடிக்கப்பட்டன.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினா், பொது மக்களின் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை மேலே கொண்டு வந்தனா். இதில் மாட்டின் ஒரு கொம்பு மட்டும் உடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT