திருப்பூர்

திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்: தோ்தல் அலுவலா் தகவல்

DIN

தோ்தல் பரிசுப் பொருள்களைத் தடுக்கும்பொருட்டு, காங்கயம் பகுதியில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு வருவாய்த் துறை அனுமதி பெற வேண்டும் என தோ்தல் அலுவலா் தெரிவித்தாா்.

காங்கயம் பகுதியில் உள்ள திருமண மண்டப உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கயம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜன் தலைமை வகித்து பேசியதாவது:

வாக்காளா்களுக்கு அரசியல் கட்சிகள் தோ்தல் பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும்பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், திருமண மண்டபங்களில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, குழந்தைகளுக்கு காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் காங்கயம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT