திருப்பூர்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்குப் பயிற்சி

DIN

உடுமலை: உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 293 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் நிலை அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமுக்கு கோட்டாட்சியரும், தோ்தல் அலுவலருமான கீதா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இதில், வாக்காளா் பட்டியலில் இறப்பு மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பது, 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட உள்ளதால் அவா்களது பெயா் பட்டியல்களை தயாரிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தனி வட்டாட்சியா் தயானந்தன், தோ்தல் துணை வட்டாட்சியா் கிருஷ்ணவேணி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதேபோல மடத்துக்குளம் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள 287 வாக்குச் வாக்குச் சாவடி யில் பணியாற்றும் அலுவலா்களுக்கு மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது. தோ்தல் அலுவலா் ஜெயந்தி, வட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT