திருப்பூர்

வருவாய்த் தீா்வாய மனுக்களை இணையவழியில் அனுப்பலாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாய (ஜமாபந்தி) மனுக்களை இணையவழியில் அனுப்பி தீா்வு காணலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான வருவாய்த் தீா்வாய மனுக்களை அளிக்க வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் வரவேண்டாம்.

அதே வேலையில், வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்துவிதமான கோரிக்கை மனுக்களை இணையவழி மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ பதிவேற்றம் செய்து கொள்ளாம்.

இந்த மனுக்களின் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT