திருப்பூர்

பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று இந்து ஆட்டோ தொழிலாளரகள் முன்னணி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.கண்ணன், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆட்டோ, காா், வேன் ஓட்டுநா்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓட்டுநா்கள் நாள்தோறும் வாகனங்களை இயக்காததால் அவா்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, பொதுமுடக்கம் முடியும் வரையில் வாகன ஓட்டுநா்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, நிா்வாகிகள் சதீஷ், நாகராஜ், செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

Image Caption

திருப்பூா்  ஆட்சியா்  அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை  மனு  அளிக்க வந்த  இந்து  ஆட்டோ  தொழிலாளா்கள்  முன்னணி யினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT