திருப்பூர்

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

8th Jun 2021 04:57 AM

ADVERTISEMENT

உடுமலை: மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க ஆளுநா் டாக்டா் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்தாா். இதில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரசு மருத்துவமனை மருத்துவா்களிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க ஆளுநா் சண்முகசுந்தரம், மருத்துவ அலுவலா்கள் அருணாகுமாரி, இளங்கோ ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலும், மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்கராமல்லூா், குமரலிங்கம், கணியூா் ஆகிய பேரூராட்சிகள், கொழுமம், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி ஆகிய ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ சி.மகேந்திரன் வழங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT