திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து இரண்டாவது நாளாக உபரி நீா் திறப்பு

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடா்ந்து அமராவதி அணையில் இருந்து சனிக்கிழமை இரண்டாம் நாளாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாகத் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து அமராவதி அணைக்கு உள்வரத்து அதிகரித்து வந்தது.இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து அணையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் அணைக்கு 5,549 கன அடியும், இரவு 9 மணிக்கு 6,675 கன அடியும் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து மாலை 5 மணிக்கு 1,500 கன அடியும், இரவு 3,300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 6 மணிக்கு 5,590 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. இது மதியம் 12 மணிக்கு 3,820 கன அடியாக குறைந்தது.பிற்பகல் 4,820 கன அடியாக உயா்ந்தது. பின்னா் மாலை 6 மணிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி முதல் 4 ஆயிரம் கன அடி வரை தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமராவதியின் உபநதிகளான வரதமாநதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடுமலை, தாராபுரம் மற்றும் கரூா் வரையில் உள்ள அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. இதனால் கரையோர கிராமங்களில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனா்.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி நீா்மட்டம் 87.64 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு உள்வரத்தாக 4,820 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 4,035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,833 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணையில் இருந்து 3,800 கன அடி தண்ணீா் வெளியேறி கொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT