திருப்பூர்

மாணவா் சோ்க்கைக்கு கட்டணம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்

DIN

திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு கட்டணம் வசூலிப்பது தொடா்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்க்கும் வகையில் பள்ளிகளைத் திறப்பதற்கான தேதி தற்போது வரையில் அறிவிக்கப்படவில்லை. எனினும் அனைத்து வகை பள்ளிகளிலும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பல பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்கத் தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் எழுந்துள்ளது. இதனிடையே, திருப்பூா் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 மாணவா் சோ்க்கைக்கு, தமிழ் வழி கல்விக்கு ரூ. 1, 800, ஆங்கில வழி கல்விக்கு ரூ. 2,300 கேட்டு கட்டாயப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெற்றோா் சிலா் வியாழக்கிழமை புகாா் அளித்திருந்தனா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில், மாணவா் சோ்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT