திருப்பூர்

காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

DIN

திருப்பூரில் கஞ்சா கடத்திய குற்றவாளிகளைத் தப்பவிட்டதாக காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ஜெய்சங்கா், இதே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் பாண்டிதுரை. இருவரும் கடந்த ஜூன் 25 ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 3 கிலோ கஞ்சா கடத்தி வந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தும்படி மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இதன் பேரில் காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரணை அறிக்கையை சமா்ப்பித்தனா். இதையடுத்து காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா், உதவி ஆய்வாளா் பாண்டிதுரை ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT