திருப்பூர்

அவிநாசியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

31st Jan 2021 09:33 PM

ADVERTISEMENT

தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலிலேயே அவிநாசியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என கொமதேக நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கொமதேக வடக்கு மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் அவிநாசி தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வி.லோகநாதன் தலைமை வகித்தார். மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் வி.பெரியசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுதர்சன் கந்தசாமி, மாவட்டப் பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவிசங்கர் வரவேற்றார்.

இதில் கொமதேக நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது: 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனித் தொகுதியாக உள்ள அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியை தற்போதைய தேர்தலிலேயை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும். விசைத்தறியாளர்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். தத்தனூர், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் தொழில் பூங்கா அமைக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

சசிகலா அதிமுக கொடி கட்டி வெளியே வந்ததைப் பார்த்தால், அதிமுகவில் உரிமை கொண்டாடுவார் போலத் தெரிகிறது. பாஜகவை அவர் எதிர்த்தால், அதிமுக தொண்டர்கள் சசிகலா பக்கம் சாய வாய்ப்புள்ளது என்றார். தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.தமிழரசு, மாவட்ட தொழில் நுட்ப அணி செயலாளர் வி.மதிவாணன், ஒன்றிய செயலாளர் ராயப்பன், இளைஞரணி பி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

Tags : tirupur
ADVERTISEMENT
ADVERTISEMENT