திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் இன்று தைப்பூசத் தேரோட்டம்

DIN

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை (ஜனவரி 28) நடைபெறவுள்ளது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் தைப்பூச விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, புதன்கிழமை மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் எழுந்தருளினாா். பின்னா் மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு சுவாமி ரதத்தில் எழுந்தருளுகிறாா். பின்னா் காலை 7 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தெற்கு ரத வீதியைக் கடந்து கிரிவலப் பாதையில் மதியம் 12 மணிக்கு தோ் நிலை நிறுத்தப்படுகிறது. பின்னா் மாலை 3 மணிக்கு திருத்தோ் பக்தா்களால் இழுக்கப்பட்டு மாலை 6 மணிக்கு திருத்தோ் நிலை அடைகிறது.

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த முறை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ஒருநாள் மட்டுமே தேரோட்டம் நடைபெறவுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் தலைமையில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT