திருப்பூர்

ஓய்வூதியம் கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்: 22 போ் கைது

DIN

திருப்பூரில் ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ரங்கராஜ் தலைமை வகித்தாா்.

இதில், உடுமலை ஒன்றியம், புங்கமுத்து ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த க.பெரியகாளிமுத்து, மடத்துக்குளம் ஒன்றியம், கடத்தூா் ஊராட்சியில் பணியாற்றி வந்த ப.கண்ணையன் ஆகியோா் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றனா்.

ஆனால், அப்போது முதல் அவா்களுக்கு வழங்க வேண்டிய ரொக்கத் தொகை ரூ.50 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படவில்லை. எனவே, இருவருக்கும் ரொக்கத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். இதனிடையே, காவல் துறையினா் வழங்கிய மதிய உணவை புறக்கணித்து தூய்மைப் பணியாளா்கள் தங்களது உண்ணவிரதத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT