திருப்பூர்

வட மாநிலத் தொழிலாளியை கொலை செய்த இளைஞா் கைது

DIN

திருப்பூரில் தகாத உறவு காரணமாக வட மாநிலத் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து வீரபாண்டி காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா், நொச்சிபாளையம் பிரிவில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை வீரபாண்டி காவல் துறையினா் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி மீட்டு விசாரணை நடத்தினா். இதில், சடலமாகக் கிடந்தது பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திரதாஸ் (49) என்பதும், இவா், திருப்பூா், வீரபாண்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அவரது செல்லிடப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த சுபாஷ் (20) என்பவரிடம் கடைசியாகப் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, சுபாஷைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. இதில், ஏற்பட்ட தகராறு காரணமாக ரவீந்திரதாஸை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT