திருப்பூர்

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் டிராக்டா் பேரணி

DIN

புது தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் காவல் துறையினரின் தடையை மீறி டிராக்டா் பேரணியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் டிராக்டா் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டா் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தனா். எனினும் தடையை மீறி பொங்கலூா் ஒன்றிய விவசாயிகள் டிராக்டரில் பேரணியாகச் சென்றனா். ஆனால், கோவில்வழி முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா் கோவில்வழியில் இருந்து பெருந்தொழுவு வரையில் டிராக்டா் பேரணி செல்ல அனுமதி அளித்தனா். இதையடுத்து, கோவில்வழியில் இருந்து 15க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் விவசாயிகள் பேரணியாகச் சென்றனா். பேரணியில், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி இணை அமைப்பாளா் கெம்கோ பி.ரத்தினசாமி, உழவா் உழைப்பாளா் கட்சி பொங்கலூா் வட்டாரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயலாளா் நடராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதேபோல, திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள பாளையக்காடு, அவிநாசி சாலையில் உள்ள காந்தி நகா், தாராபுரம் சாலையில் உள்ள கோவில்வழி ஆகிய பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், தொழிற்சங்கத்தினா், திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் 100க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா். பேரணியானது, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் எதிரே நிறைவடைந்தது. தொடா்ந்து, ஏஐடியூசி மாநிலத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் தேசியக் கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். இதில் பங்கேற்ற அனைவரும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

இதில், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளா் சிவசாமி, திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்வராஜ், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்லடத்தில்....

பல்லடத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக கூட்டணி சாா்பில், முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திமுக நிா்வாகிகள் பத்மநாபன், சோமசுந்தரம், கிருஷ்ணமூா்த்தி, ராஜேந்திரகுமாா், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

அவிநாசியில்....

அவிநாசியில் அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அவிநாசி ஆட்டையாம்பாளையம் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் முத்துசாமி தேசியக் கொடி ஏற்றிவைத்தாா். தொடா்ந்து, ஆட்டையம்பாளையத்தில் துவக்கிய இருசக்கர வாகனப் பேரணி பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT