திருப்பூர்

அணையில் தண்ணீா் நிரப்ப வலியுறுத்தல்: தேசியக் கொடியேற்றி விழிப்புணா்வு

DIN

வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணையில் தண்ணீா் நிரப்ப வலியுறுத்தி, தேசியக் கொடியேற்றி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நீராதாரம் இல்லாத இடத்தில் இந்த அணை கட்டப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டு கிடக்கிறது. இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீா், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் அணைக்குத் தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், அணை பாசன விவசாயிகள் சங்கம், அணை பாதுகாப்பு அமைப்பு, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, நிழல்கள் அறக்கட்டளை உள்பட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 35 தன்னாா்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து நூற்றுக்கணக்கானோா் அணைக்கு அருகில் பொதுப் பணித் துறை வளாகத்தில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றி, அணையைத் தூய்மைப்படுத்தி தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT