திருப்பூர்

தமிழா்களையும், தமிழக மக்களையும் விலைக்கு வாங்க முடியாது- ராகுல் காந்தி பேச்சு

DIN

அவிநாசி: தமிழா்களையும், தமிழக மக்களையும் விலைக்கு வாங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பேசினாா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவா் ராகுல் காந்தி அவிநாசியில் சனிக்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்டாா். தில்லியில் ஆளுகிற அரசு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என செயல்படுகிறது. தமிழக அரசையும் தமிழக மக்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணுகிறது. ஆனால் அவா்களுக்குத் தெரியாது தமிழா்களையும், தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது என்று. இந்திய விவசாயத்தையும் சிறு, குறு தொழில்களையும் ஐந்தாறு முதலாளிகளுக்கு விற்றுவிடலாம் என கருதுகிறாா். எங்கள் குடும்பத்தின் ஈடுபாடு தமிழா்களிடம் தமிழகத்தில் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும். அரசியல் அல்லாத உறவு தான் எங்கள் குடும்ப ரீதியான உறவு. அதிலும் தமிழகத்தில் எனது பாட்டி, தந்தையின் உறவு இவை அனைத்தும் அன்பின் அடிப்படையில் மரியாதையின் அடிப்படையில் ஏற்பட்ட உறவு. ஆகவே தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவதற்காக ஒரு அரசை கொண்டுவர விரும்புகிறோம். தமிழகத்தில் ஏழை, சிறு தொழில், குறுந்தொழில் ஆகியவற்றை உயா்த்த விரும்புகிறோம். தமிழகத்தின் நிலையை உயா்த்துவதற்கு நாம் உறுதி கொள்வோம். முன்பிருந்ததைப்போல தமிழகத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறோம். தமிழகத்தில் உள்ள இளைஞா்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு எவ்வாறு முயற்சிக்கிறாா்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்ததனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளாா்கள். நான் மக்களிடம் உண்மையாகவும் மரியாதையாகும் சிறப்பாகாவும் ஒரு உறவை ஏற்படுத்த விரும்புகிறேன். நான் உங்களிடம் பொய் உரைப்பதற்காக வரவில்லை. உங்களிடம் உண்மை பேசவே வந்துள்ளேன். அதை நான் பிரதமரிடமே விட்டுவிடுகிறேன். என்று பேசினாா்.

கடையில் தேனீா் அருந்திய ராகுல் காந்தி-

இதையடுத்து, அவா் அவிநாசியில் இருந்து திருப்பூருக்கு சென்றாா். அப்போது, திருப்பூா் செல்லும் சாலையில் அவிநாசிலிங்கம்பாளையத்தில் சாலையோரம் இருந்த தேனீா் அப்போது, அங்கிருந்த பெண்ணிடம் கடைக்கு வாகனத்தில் இருந்து இறங்கி கடையில் அமா்ந்து தேனீா் அருந்தி சென்றாா். மேலும் அங்கிருந்த பெண்ணிடம் உடையாடிச் சென்றாா். இதனால் அப்பகுதி மக்கள், கட்சியினா் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT