திருப்பூர்

தமிழகத்தின் குரலை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன்: ராகுல் காந்தி

24th Jan 2021 09:00 PM

ADVERTISEMENT

தமிழகத்தின் குரலை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தாராபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, பணமதிப்பிழப்பு, தொழில் முதுகெலும்பை உடைக்க ஜி.எஸ்.டி சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் லட்சகணக்கான இளைஞர்களின் கனவுகளை பா.ஜ.க அரசு சிதைத்துள்ளது. கரோனா வந்தவுடன் மோடி அவரது 5 பணக்கார நண்பர்களின் 10 லட்சம் கோடியை ரத்து செய்தார். ஆனால் மக்களுக்கான கடன்கள் ரத்து செய்யப்படவில்லை. 

மேக் இன் இந்தியா உண்மை எனில் ஜி.எஸ்.டி வரியை ஏன் கொண்டு வந்திருக்க வேண்டும். சீன ராணுவம் நமது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கொண்டு இருக்கின்றது. சீன நாட்டினருக்கு பிரதமர் மோடி பலவீனமானவர் என்பதை புரிந்து கொண்டனர். இதனால் தைரியமாக நமது நாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். 3 விவசாயச் சட்டங்கள் மூலம் சந்தை பொருளாதாரத்தை சிதைக்க முயல்கின்றார். மோடி, அரிசி, உணவு தானியங்களை அளவின்றி சேமித்து வைக்க அவரது பணக்கார நண்பர்களுக்கு மோடி உதவுகின்றார்.

ADVERTISEMENT

விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது. தங்கள் எதிர்காலத்தை சிதைப்பதை விவசாயிகள் உணர்ந்து இருக்கின்றனர். விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் இதை அனுமதிக்காது. தமிழ்நாட்டு அரசை பிளாக் மெயில் செய்வது போல, தமிழக மக்களையும் மிரட்டி விடலாம் என மோடி நினைகின்றார். தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழக இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள். நாக்பூர் சாராய வியாபாரிகள் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. தமிழக இளைஞர்களால் மட்டுமே நிர்ணயம் செய்ய முடியும். 

மக்கள் நலன் சார்ந்த அரசை உருவாக்கவே நான் உதவுகின்றேன். மக்கள் நலன் சார்ந்த அரசை அவர்களால் மிரட்ட முடியாது. உங்களுடனான என் உறவு அரசியல் உறவல்ல. இது குடும்ப உறவு. இது அன்பால், கருணையால் ஏற்பட்ட உறவு. உங்கள் தந்தையை போலவே எனது தந்தையை போல பாவித்தீர்கள். தமிழ் மொழியின் பெருமையை தூக்கி சுமப்பது என் கடமை். அற்புதமான தமிழ் மொழியை காப்பதே எனது கடமை. தமிழகத்தின் குரலை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன். நம்முடைய அத்தனை கலாச்சாரங்களும் நாட்டின் அடித்தளம்.

இந்தியாவில் தமிழ்நாடு இருக்கின்றது என்கின்றனர். தமிழ்நாட்டில், இந்தியா இருப்பதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இந்தியா இருப்பதை நாங்கள் சொல்கின்றோம். இது தான் எங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கும் இருக்கும் வேறுபாடு மனம் திறந்து பேசுகின்றேன் என மங்கி பாத் செய்ய வில்லை. உங்கள் மனம் பேசுவதை கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன் என்றார்.

Tags : rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT