திருப்பூர்

வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்து விடுவதில் பாரபட்சம்

DIN

திருமூா்த்தி அணையில் இருந்து வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடுவதில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டி வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திருமூா்த்தி அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரில் வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு முறையான தண்ணீா் திறக்கப்படுவதில்லை. தண்ணீா் திறப்பதில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதுடன், முறைகேடாக தண்ணீா் விற்பனையில் ஈடுபடுகின்றனா். மேலும், தண்ணீா் வழங்கும் நாள்களையும் குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆகவே, திருமூா்த்தி அணையில் இருந்து வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான உயா்மின் கோபுரத் திட்டத்தை விவசாய நிலங்களின் வழியாக செயல்படுத்தக்கூடாது.

இதற்கு பதிலாக சாலையோரமாக புதைவடகம்பி அமைத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்ட்டன.

கூட்டத்தில், திமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT