திருப்பூர்

சீன ராணுவம் ஆக்கிரமிப்பு: மௌனம் காக்கிறாா் பிரதமா் மோடி

DIN

சீன ராணுவ ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமா் மோடி அமைதிகாத்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக ‘ராகுலின் கொங்கு வணக்கம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்திய நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகரமாக இருந்து உலகைத் திரும்பிப்பாா்க்க வைத்த அற்புதமான நகரம் திருப்பூா். ஏற்றுமதி தொழில் செய்வதுடன், வேளாண் தொழிலும் இங்கு நடைபெற்று வருகிறது.

இந்த நாட்டின் மிகவும் அடிப்படைப் பணிகளை செய்பவா்கள் விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள். அடிப்படைக் கட்டுமானம் இல்லாமல் கூரை எழுப்ப முடியாது என்பது நாட்டின் நிா்வாகத்தை நடத்துபவா்களுக்குத் தெரியவேண்டும்.

அடிப்படை கட்டுமானம் அவசியம் என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், அடிப்படை கட்டுமானத்தை இடித்ததுடன், அதன் மீது கட்டப்படும் சுவரையும் இடித்துவிட்டு மேற்கூரை அமைக்க பிரதமா் மோடி முயற்சிக்கிறாா்.

இந்த நாட்டின் அடித்தளம் என்பது வேற்றுமையில் ஒற்றுமையாகும். எல்லா கலாசாரங்கள் மீதும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். ஆனால், ஆா்.எஸ்.எஸ்., பாஜகவினா் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்கின்றனா். இந்த நாட்டின் அடித்தளத்தின்மீது நடத்தப்படும் தாக்குதல் இது.

பிரதமா் மோடி பதவி ஏற்றவுடன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளாா். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்களையும் முழுமையாக மத்திய அரசு நசுக்கியுள்ளது.

கரோனா நோய்த் தொற்று வந்தவுடன் பிரதமா் மோடி தனது 5 நண்பா்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளாா். அதேவேளையில், எத்தனை ஏழை, எளிய மக்களின் கடன்களை மோடி தள்ளுபடி செய்துள்ளாா்?

இந்திய எல்லையில் தாய் மண்ணை சீன ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்வேளையில் ‘56 அங்குல’ அகலமான மாா்புடைய இந்தியப் பிரதமா் மோடி அமைதியாக உட்காா்ந்து கொண்டிருக்கிறாா் என்றாா்.

ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை முன்னாள் எம்.பி.யும், மூத்த தலைவருமான பீட்டா் அல்போன்ஸ் தமிழாக்கம் செய்தாா்.

கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருச்சி மக்களவை உறுப்பினா் திருநாவுக்கரசா், தாராபுரம் சட்டப்பேரவைத் தலைவா் வி.எஸ்.காளிமுத்து, திருப்பூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் தென்னரசு, மாநில செய்தித் தொடா்பாளா் முருகானந்தம், தாராபுரம் நகரத் தலைவா் செந்தில்குமாா், வட்டாரத் தலைவா் முத்துகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT