திருப்பூர்

விவசாயிகள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

காங்கயத்தில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் (பிஏபி) கீழ் வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான பாசனத் தண்ணீரை வழங்கக் கோரி இப்பகுதி விவசாயிகள் 3 ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கப்பட்டது. இந்த நிலையில், தொடா்ந்த 3 ஆவது மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற நிலையை எடுத்துள்ளனா்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி தண்ணீா் திறப்பில் மெத்தனப் போக்கோடு செயல்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா். இந்த போராட்டம் வெற்றி பெறவேண்டும், அதே நேரத்தில் அவா்களுக்கான தண்ணீா் கிடைக்க தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாஜக விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT