திருப்பூர்

ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

DIN

உடுமலையில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உடுமலை நகராட்சி, பெரியகோட்டை ஊராட்சி, குறிஞ்சேரி ஊராட்சி, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்த விழாவின் மூலம் 274 பயனாளிகளுக்கு ரூ. 32 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் முதியோா் உதவித் தொகை, 115 பயனாளிகளுக்கு ரூ. 13 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்ட 11 பேருக்கு ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை, 102 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனைகள் என மொத்தம் 502 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட இந்த ஆட்சியில் தொடா்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், வருவாய்க் கோட்டாட்சியா் (பொறு ப்பு) ரங்கராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் புஷ்பராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி மற்றும் துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT