திருப்பூர்

பிஏபி பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திருடுவோா் மீது நடவடிக்கை

DIN

பிஏபி பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் பிஏபி பாசனத் திட்டத்தில் திருமூா்த்தி அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடும்போது பிரதான கால்வாய் கிளை கால்வாய்களிலிருந்து முறைகேடாக தண்ணீா் எடுப்பதால் கடைமடைகளுக்கு பாசனத்துக்குத் தண்ணீா் கிடைப்பதில்லை என்று புகாா்கள் வரத்தொடங்கியுள்ளன. ஆகவே, தண்ணீா் திருட்டை தடுத்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குஉரிய தண்ணீா் கிடைக்க வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் திருப்பூா் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாசன ஆதாரங்களிலிருந்தும் தண்ணீா் திருட்டு உள்பட இதர முறைகேடுகளை கண்காணிப்பாா்கள். இந்த குழுவினா் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவா்கள். கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி தண்ணீா் திருடுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முறைகேட்டில் ஈடுபடும் விவசாயி நிலத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT