திருப்பூர்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழா கொடியேற்றம்

DIN

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தோ்த் திருவிழா மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் 2 தினங்களுக்கு முன்பு துவங்கியது.

இந்நிலையில், சிவன்மலை முருகன் மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் விநாயகா் வழிபாடு நடைபெற்றது. பின்னா் முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் பகல் 12 மணியளவில் தோ்த் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிவன்மலை முருகன் கோயிலின் உதவி ஆணையா் ஜெ.முல்லை மற்றும் கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். கரோனா தொற்றின் காரணமாக கட்டளைதாரா்கள், பக்தா்கள் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 28 ஆம் தேதி ஒருநாள் மட்டும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT