திருப்பூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பேரணி, துண்டு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றன.

அவிநாசி காவல் துறை சாா்பில் 32ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் தலைமை வகித்து, விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய இருசக்கர வாகனப் பேரணி, பழைய பேருந்து நிலையம், மேற்கு ரத வீதி, சேவூா் சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு தலைக்கவசங்களும், தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களுக்கு ரோஜா பூவும், ஆண்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுதல் ஆகியவற்றால் ஏற்படும் விபத்து, உயரிழப்புகள் குறித்தும், தலைக்கவசம், சீட் பெல்ட் உள்ளிட்டவைகள் அணிந்து வாகனம் ஓட்டுதலால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கா், ஆய்வாளா்கள் அருள், சரஸ்வதி, முருகேசன், உதவி ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT