திருப்பூர்

திருப்பூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

21st Jan 2021 07:24 PM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திருப்பூரில் வியாழக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழநாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற அலுவலர்கள் கூறியதாவது: பழிவாங்கும் நோக்கத்துடனும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்ட சங்க நிர்வாகிகளின் மாவட்ட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட 17பி உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான அனைத்து நிலை பதவி உயர்வு ஆணைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்.

ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : tirupur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT