திருப்பூர்

காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

21st Jan 2021 07:43 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: திருப்பூர் ,மாவட்டம், காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்ற லாரி ஓட்டுநர் வாய்க்காலில் தவறி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், பெரியப்பட்டி, மந்திக்குலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ஆலடியான் (44). லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் காங்கயம் - முத்தூர் சாலையில் உள்ள மிதிப்பாறை பகுதியில் செல்லும் பிஏபி வாய்க்கால் அருகே, லாரியை நிறுத்தி விட்டு வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி, வாய்க்காலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனில்லாமல், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக காங்கயம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT