திருப்பூர்

தொடா் மழை: தாராபுரத்தில் 500 ஏக்கா் பரப்பிலான மக்காச்சோளப் பயிா்கள் சேதம்

DIN

தாராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தன.

தாராபுரத்தை அடுத்துள்ள சின்னப்புத்தூா், பொட்டிக்காம்பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கா் பரப்பளவில் மக்காச் சோளப் பயிா்கள் பயிரிடப்பட்டு இருந்தன. இதில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவிடப்பட்டு 90 நாள்களில் நன்கு விளைந்து பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன.

மேலும், ஒரு சில இடங்களில் மக்காச்சோளங்களை கதிா் அடிப்பதற்காக விளைநிலங்களில் அம்பாரத்தில் வைத்திருந்தனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தாராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் மழைநீரில் நனைந்து அழுகி சேதமடைந்தது. எனவே ளாண்மைத் துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT