திருப்பூர்

அங்கன்வாடி மையம் அருகே கழிப்பிடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து மனு

DIN

திருப்பூரை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அருகே கழிப்பிடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து பொது மக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

எங்களது பகுதியில் உள்ள ஆவரங்குட்டை ஏரிக்கரையின் கீழ்புறத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் அருகே பேருந்து நிறுத்தம், தொடக்கப் பள்ளி ஆகியவை உள்ளன. இதன் அருகில் சேதமடைந்த நிலையில் கழிப்பிடம் உள்ளதால் அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கன்வாடி மையம் அருகே புதிதாக கழிப்பிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளால் புதிய கழிப்பிடத்தை வேறு பகுதியில் கட்டவும், பழைய கழிவறையை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு கூண்டு அமைக்கக் கூடாது:

திராவிடா் விடுதலை கழகத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் முகில்ராசு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாா், அண்ணா சிலைகளுக்கு தற்போது கூண்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மறைந்த தேசத் தலைவா்களின் சிலைகளை மறைக்கக் கூடாது என்று உயா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. எனவே, சிலைகளுக்கு கூண்டு அமைத்தால் மரியாதை செலுத்த நினைக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, சிலைகளுக்கு கூண்டு அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கக் கோரிக்கை: பொங்கலூா், பெரியாா் நகா் பகுதி பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பெரியாா் நகரில் கடந்த 15 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். ஆனால், எங்களுக்கு தற்போது வரை மின்சாரம், பட்டா வழங்கப்படவில்லை. இது தொடா்பாக கடந்த 10 ஆண்டுகளாக மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வீடுகளில் மின்சாரம் இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆகவே, எங்களது குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT