திருப்பூர்

தாராபுரம் அருகே வட மஞ்சுவிரட்டு

DIN

திருப்பூா்: தாராபுரத்தை அருகே தளவாய்பட்டினம் கிராமத்தில் வட மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகளை அடக்கிய வீரா்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தாராபுரம் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளாக வட மஞ்சுவிரட்டு விழா நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு குழுவினா், தளவாய்பட்டினம் பொதுமக்கள் சாா்பில் அண்ணா திடலில் ஜனவரி 16, 17ஆகிய இரு நாள்கள் போட்டி நடைபெறுகிறது. விழா குழுத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். இதில் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு இரண்டு பல் அதற்கு மேல் உள்ள மாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

மாடுபிடி வீரா்கள் வால் எடுக்க கொம்பு பிடிக்க அனுமதிக்கப்படவில்லை, மாட்டின் கொம்புகள் கூா்மையாக இருந்தால் அனுமதி மறுக்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ளும் வீரா்கள், மாட்டின் உரிமையாளா் இரு நாள்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்டனா். மது அருந்தியவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தாராபுரம், தளவாய்பட்டினம், செலாம்பாளையம், கள்ளிவலசு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

சனிக்கிழமை நடைபெற்ற வட மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகள் முட்டியதில் 3 போ் லேசான காயமடைந்தனா். காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில், அண்டா, வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

தாராபுரம் துணை கண்காணிப்பாளா் ஜெயராம், காவல் ஆய்வாளா் மகேந்திரன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் திருப்பூா், கரூா், திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT