திருப்பூர்

காங்கயத்தில் அம்மா இருசக்கர வாகனத்திற்கு மானியம் வழங்கும் விழா: 40 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மானியம்

13th Jan 2021 05:13 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: உழைக்கும் மகளிருக்கான ரூ.25,000 மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் விழா காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு தலைவர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமை வகித்தார். காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, உழைக்கும் மகளிர் 40 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சத்துக்கு  காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சி ஆணையர் தேவிகா, நகராட்சிப் பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி, காங்கயம் கூட்டுறவு சங்கத் தலைவர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலர் ஏ.பி.துரைசாமி, அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலர் கே.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT