திருப்பூர்

பல்லடத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

4th Jan 2021 10:18 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதற்கு தலைமை தாங்கி பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ. நடராஜன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் குடை பிடித்துக்கொண்டு வந்து சமூக இடைவெளியுடன் நின்று முகக்கவசம் அணிந்து வந்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500  பெற்றுச் சென்றனர். 
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏ.சித்துராஜ், ஏ எம் ராமமூர்த்தி, கூட்டுறவு வங்கி செயலர் ஜெயபால், அதிமுக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் ப.நடராஜன், தமிழ்நாடு பழனிச்சாமி, ஜம்புமணி, ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

Tags : Pongal gift
ADVERTISEMENT
ADVERTISEMENT