திருப்பூர்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.5 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம்

4th Jan 2021 07:45 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.5 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் திங்கள்கிழமை ஏலம் போனது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் திங்கள்கிழமை விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 9 விவசாயிகள் 159 மூட்டை (7 ஆயிரத்து 943 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முத்தூர், காங்கயம், வெள்ளகோவில், கொடுமுடி, மூலனூர், பெருந்துறை, ஊத்துக்குளி  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.9.5 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது.

ADVERTISEMENT

.தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.122-க்கும், குறைந்த பட்சமாக ரூ.96-க்கும், சராசரியாக ரூ.120-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மகுடீஸ்வரன் செய்திருந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT