திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளையின் பெயர் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் கிளை பலகை திறப்பு விழா, உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளை தலைவர் எம்.மணி தலைமை வகித்தார்.
இதில், தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாளர் அட்டை, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால் சங்கக்கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளர் முருகசாமி வரவேற்றார்.
ஊத்துக்குளி கிளை கெளரவ தலைவர் ஆர்.குமார் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊத்துக்குளி பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் கே.பெரியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளர் கே.எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.