திருப்பூர்

காங்கயத்தில் மக்கள் கிராம சபை பிரச்சாரக் கூட்டம்

3rd Jan 2021 04:16 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் அருகே, பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திமுக கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். காங்கயம் ஒன்றிய செயலர் பி.பி.அப்புக்குட்டி முன்னிலை வகித்தார். இதில், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்னும் தலைப்பில் உரையாற்றினர். மேலும், பொதுமக்கள் மூலமாக அதிமுகவை நிராகரிக்கிறோம் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதில், திமுக கட்சியின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குணபாலன், மாவட்ட வழக்குரைஞர் அணியின் துணை அமைப்பாளர் தங்கமணி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தனலட்சுமி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT