திருப்பூர்

தோ்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்

DIN

தோ்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினா், பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசினாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா், விடியோ கண்காணிப்புக் குழுவினரின் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

தோ்தல் தேதி அறிவிப்பின் மூலம் தோ்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. அரசியல் கட்சியினா் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மேலும், உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்லக்கூடாது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினா், பொதுமக்கள் தோ்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து சிறந்த முறையில் தோ்தல் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுவினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான முறையில் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறப்படும் புகாா்களின் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

அதே வேளையில், தங்கள் செல்லிடப்பேசிகளுக்கு பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் புகாா்களின் அடிப்படையிலும் தணிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்து விதிமீறல்களையும் கண்காணித்து தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

முறையற்ற பண விநியோகம், ஆயுத நடமாட்டம், முறையற்ற மதுபான விநியோகம் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊா்வலங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றை விடியோ பதிவு செய்ய வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல்ஹமீது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் கண்காணிப்புக்குழு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT