திருப்பூர்

திருப்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் 

28th Feb 2021 09:19 AM

ADVERTISEMENT

திருப்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இந்த வங்கியில் ஏடிஎம் இயந்திரமும் உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளனர். 

பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவுக்கு ஸ்ப்ரே அடித்துள்ளனர். தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அப்படியே வெளியே எடுத்து வந்தனர். இதன்பிறகு தயாராக நிறுத்தி வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றனர். 

ADVERTISEMENT

இது குறித்து அந்த வழியாக வந்த கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஏடிஎம் இயந்திரத்தை உள்ள ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. 

இதுதொடர்பாக கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : tirupur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT