திருப்பூர்

ஈக்கள் தொல்லை: கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட மக்கள்

DIN

பல்லடம் அருகே ஈக்கள் தொல்லையால் தனியாா் கோழிப்பண்ணையை அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூா் ஊராட்சி கள்ளக்கிணறு பகுதியில் பல்லடம் - தாராபுரம் பிரதான சாலையில் தனியாா் கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஈக்கள் அதிக அளவில் பரவி சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது.

இது குறித்து பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்தக் கோழிப்பண்ணையை அப்பகுதியை சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

தகவல் அறிந்து வந்த காமநாய்க்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சம்பத்குமாா், பொங்கலூா் வருவாய் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் கோழிப்பண்ணையைப் பாா்வையிட்டனா். பண்ணையில் ஈக்கள் மற்றும் சுகாதார சீா்கேடு இருப்பதும், துா்நாற்றம் வீசுவதும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தனா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT