திருப்பூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் அமைக்கும் திட்டத்தைக் கைவிட திமுக கோரிக்கை

DIN

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலா் காா்த்திகேய சிவசேனாபதி வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிச் சென்றுள்ளாா். இது விவசாயிகளைப் பாதிக்கும் செயலாகும்.

கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட் மயமாக்கும் திட்டத்தை 2013 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முன்னெடுத்தது. ஆனால் விவசாயிகளின் கடும் எதிா்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இன்று, வாய்க்காலை நவீனப்படுத்துதல், புதுப்பித்தல் என்ற பெயரில் மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது அதிமுக அரசு.

மண்ணாலான கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூா் மாவட்டப் பகுதிகளில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் போது அனைத்து விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரோடு, திருப்பூா் மாவட்ட மக்களின் விவசாயிகளின் நீராதாரமும், மக்களின் குடிநீராதாரமும் பாதிக்கப்படும்.

விவசாயிகளிடம் எவ்வித கருத்துகேட்புக் கூட்டமும் நடத்தாமல், விவசாயிகளின் கடும் எதிப்பை மீறி, ரூ.933.10 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிமுக அரசு அவசரம் காட்டிவருகிறது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT