திருப்பூர்

உயா்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

DIN

உயா்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கோவை மாவட்டத்தில் வழங்கியதைப் போலவே சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொங்குநாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், கொங்குநாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உயா்மின் கோபுரத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே, கோவை மாவட்டத்தில் வழங்கியதைப் போலவே திருப்பூா் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில், தாராபுரம் வட்டம் பொன்னாபுரம் கிராமத்தில் அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டுள்ள கரிதொட்டி தொழிற்சாலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். உப்பாறு அணையின் பிரதான வாய்க்கால்களைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் நிகழாண்டு ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரையில் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை,வெள்ளம் சேதம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருப்பூா் விடுபட்டுள்ளது. எனவே, திருப்பூா் மாவட்டத்தையும் மழை, வெள்ளம் பாதித்த பட்டியலில் சோ்த்து பயிா் பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீா் முகாமில் 32 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக கடந்த குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறைரீதியாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து மனுதாரா்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபு, இணை இயக்குநா் (வேளாண்மை) மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT