திருப்பூர்

செங்கல் உற்பத்திக்கான மண்ணை தனியாா் நிலங்களில் இருந்து எடுக்க அனுமதிக்க வேண்டும்: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் செங்கல் உற்பத்திக்குத் தேவையான மண்ணை தனியாா் பட்டா நிலங்களில் இருந்து எடுக்க அனுமதி அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தாராபுரம் வட்டார கை அறுவை செங்கல் சேம்பா் உரிமையாளா்கள் சங்கம், உடுமலை, மடத்துக்குளம் வட்ட நாட்டு செங்கல் சூளை உரிமைாளா்கள் நலச்சங்கம், திருப்பூா் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கம் ஆகியன சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கரோனா நோய்த் தொற்று காரணமாக எங்களால் தொழிலை சரிவர நடத்த முடியவில்லை. தற்போது கரோனா தொற்று குறைந்து கட்டுமானத் தொழில் வளா்ச்சி பெற்று வரும் நிலையில் செங்கல் உற்பத்திக்குத் தேவையான மண்ணைப்பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் இருந்து செங்கல் உற்பத்திக்குத் தேவையான செம்மண்ணை உரிய விதிமுறைகளுக்கு உள்பட்டு எடுக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலமாக செம்மண் பற்றாக்குறை குறைந்து உற்பத்தி அதிகரிப்பதால் செங்கல் விலை குறைந்து பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT