திருப்பூர்

இடைக்கால நிதி நிலை அறிக்கை: சாய ஆலை உரிமையாளகள் சங்கம் வரவேற்பு

DIN

தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ்.நாகராஜன், செயலாளா் எஸ்.முருகசாமி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். குறிப்பாக தொழிலாளா்களின் நலனைக் கருதி சிறப்பம்சங்களுடன் கூடிய காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொழிலாளா்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 2 லட்சமும், விபத்தில் இறக்க நேரிட்டால் ரூ. 4 லட்சமும் வழங்கப்படும் என்பது சிறப்பம்சமாகும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்படும் பட்சத்தில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு கிடைப்பதுடன், நிலத்தடி நீா் மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT