திருப்பூர்

காங்கயத்தில் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் விழா

24th Feb 2021 04:22 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, கட்சியின் காங்கயம் நகரச் செயலரும், மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு தலைவருமான ஜி.மணிமாறன் தலைமையில், காங்கயம் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், அதிமுக மாவட்டப் பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர் குமார், கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவர் என்.பாலகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி, மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலர் என்.எஸ்.லோகநாதன், நகர ஜெயலலிதா பேரவை செயலர் கே.என்.சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT